The Chauvet cave: பிரான்சில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆச்சரிய கண்டுபிடிப்பு
பிரான்சில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சில விடயங்கள் அங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
The Chauvet cave
தென்பிரான்சிலுள்ள Ardèche என்னுமிடத்தில் The Chauvet-Pont-d'Arc Cave என்னும் ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு அந்தக் குகை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் குகையில் சுமார் 36,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் தலைசிறந்த குகை ஓவியங்களைக் கொண்டுள்ள குகை, பாலியோலித்திக் யுகத்தைச் சேர்ந்த குகை என பல சிறப்பம்சங்கள் அந்த குகைக்கு கிடைத்துள்ளன.
பொதுமக்களுக்கு அந்தக் குகைக்குச் செல்ல அனுமதி இல்லை. தொடர்ந்து ஆச்சரியமளிக்கும் அந்த குகை குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.
யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய தளம் என்னும் பெருமையை பெற்றுள்ள அந்தக் குகை குறித்த காட்சிகளை இங்கு காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |