குறைந்த விலையில் Flight Ticket Booking! கூகுளின் இந்த அம்சம் தெரிந்தால் போதும்
எந்த நேரத்தில் விமான டிக்கெட் புக் செய்தால் சிறந்ததாக இருக்கும் என்று Google Flights insights என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் ஃபிளைட்ஸ் இன்சைட்ஸ் (Google Flights insights)
ஆன்லைன் விமான டிக்கெட் புக்கிங் சர்ச் சர்வீஸ் வழங்கும் Google Flights தற்போது Google Flights insights என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது விமான பயணம் செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அம்சத்தில், மிகக்குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய எது சரியான நேரம் என்ற பரிந்துரைகளை பயனர்களுக்கு வழங்கும். இந்த பரிந்துரையானது விமானத்தின் முந்தைய தரவுகள் அடிப்படையில் வழங்கப்படும்.
குறைந்த விலையில் விமான டிக்கெட்
ஒரு குறிப்பிட்ட வழிதடத்திற்கான முந்தைய சராசரி விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதனுடைய விலையானது அப்படியே இருக்கிறதா, குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்பதை பார்க்க கூடிய வசதி Google Flights -ல் ஏற்கனவே உள்ளது.
இதனால், வரக்கூடிய நாள்களில் டிக்கட்டை பதிவு செய்வதால் விலை குறைய வாய்ப்புள்ளதா என்று Google பிளாக் போஸ்டில் வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதற்கு கூகுள் தரப்பில்,"உங்களது தேர்வுகளை எளிமையாக்க அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்ட insights அறிமுகப்படுத்துகிறோம் என்றும், நீங்கள் தேர்வு செய்த தேதி மற்றும் சேர வேண்டிய இடத்திற்கு எந்த நேரத்தில் புக் செய்தால் விலை குறையும் என்ற தகவலை பெற முடியும் என்றும்" கூறப்பட்டுள்ளது.
நோட்டிஃபிகேஷன் (Notification)
Google insights ஆனது நீங்கள் பயணம் செய்யும் தேதியின் 2 மாதங்களுக்கு முன்பாகவே சரியான நேரம் எது என்பதை பரிந்துரைத்துவிடும். இந்த வாரத்தில் Google Flights insights வெளியிடப்படும்.
ப்ரைஸ் டிராக்கிங் செய்வது போன்ற ஏராளமான அம்சங்களை Google insights வழங்குகிறது. இந்த அம்சத்தை நீங்கள் ஆன் செய்து விட்டாலே போதும். கூகுள் இதற்கான தகவலை முன்கூட்டியே தெரிவிக்கும். Google account -ல் லாகின் செய்து இந்த அம்சத்தை நீங்கள் எனேபில் செய்ய வேண்டும்.
மற்றொரு அம்சம்
இதில் இருக்கக்கூட மற்றொரு அம்சம் என்னவென்றால் விலைக்கான கேரண்டி. ஒரு சில விமானங்களின் ரிசல்ட்களில் கலர்ஃபுள் பிரைஸ் கேரண்டி பேட்ச் இருக்கும். இது, நீங்கள் பார்க்கக்கூடிய விலையானது பயணம் தொடங்குவதற்கு குறையாது என்பதை காட்டுகிறது.
இந்த விமானங்களில் ஒன்றில் நீங்கள் டிக்கெட்டை புக் செய்தால் விமானம் டேக் ஆப் ஆவதற்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் Google விலையை கண்காணித்து கொண்டு வரும்.
அதனால், நீங்கள் புக் செடிக்கெட் விலை குறைவாகி விட்டால் மீதம் இருக்கக்கூடிய தொகையை Google Pay வழியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |