லண்டனில் வாழ்வதற்கு செலவு குறைந்த இடங்கள் எது தெரியுமா?
பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாழ்வதற்கு செலவு குறைந்த இடங்கள் குறித்த தகவலை homeviews இணையதளம் வெளியிட்டுள்ளது.
Havering
சராசரி வாடகை: £1,145 pcm (Per Calendar Month)
சராசரியாக £1,145 pcm வாடகையுடன், லண்டனில் வாழ்வதற்கு செலவு குறைந்த இடமாக Havering உள்ளது. லண்டனில் உள்ள பெரும்பாலான இடங்களை விட Havering குறைந்த மக்கள்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. மேலும் ஏராளமான திறந்தவெளி பசுமையான இடங்களையும் கொண்டுள்ளது.
Bexley
சராசரி வாடகை £1,150 pcm
சராசரியாக £1,150 pcm வாடகையுடன், வாழ்வதற்கு செலவு குறைந்த லண்டனில் உள்ள இடங்களில் Bexley இரண்டாவது இடத்தில் உள்ளது. Bexley லண்டன்வாசிகளுக்கு பெக்ஸ்லிஹீத், சிட்கப், எரித் மற்றும் கிரேஃபோர்ட் போன்ற பகுதிகளில் நல்ல மதிப்புள்ள வீடுகளை வழங்குகிறது.
Sutton
சராசரி வாடகை £1,150 pcm
Suttonம் இந்த பட்டியலில் Bexley உடன் சமமான இடத்தில் உள்ளது. சராசரியாக £1,150 pcm வாடகை மற்றும் ஏராளமான பசுமையான இடங்கள் இங்கு இருக்கிறது.
மத்திய லண்டனில் பணிபுரியும் இளம் பெற்றோருக்கு இது மிகவும் அழகாக பகுதியாக அமைகிறது. கூடுதலாக, பள்ளிகளும் இங்கு நிறைய அமைந்துள்ளது.