தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3760 சரிவு.., இன்றைய நிலவரம் என்ன?
Check today november 20th 2026 gold and silver price- இன்றைய ( நவம்பர் 20) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய நிலவரம்
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.13,600 வரை சரிந்துள்ளது.
நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980க்கும், சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510க்கும், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.385 குறைந்து ரூ.9,420க்கும், சவரனுக்கு ரூ.3,080 குறைந்து ரூ.75,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனைத்தொடர்ந்தும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.75 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |