கொரோனா சான்றிதழ்களை கட்டாயம் சரி பாருங்கள்: பயணங்களில் சிக்கல் வரலாம்
கொரோனா சான்றிதழில் பதிவாகியுள்ள தரவுகள் உங்கள் கடவுச்சீட்டுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டால், பயணங்கள் தடை படலாம் என தெரிய வந்துள்ளது.
கொரோனா சான்றிதழில் பதிவாகியுள்ள பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் உங்கள் கடவுச்சீட்டுடன் ஒப்பிடுகையில் வேறுபட்டால், பயணங்கள் அல்லது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா சான்றிதழ் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணமாக கருதப்படுவதால், அனைத்து சரியான தரவையும் கொண்டிருக்க வேண்டும்.
பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்த போது தங்களின் பெயரில் ஒரு வார்த்தையை அல்லது பதிவு செய்யும் போது எழுத்துப் பிழையும் நேர்ந்திருக்கலாம்.
இதனால் நம்மிடம் உள்ள அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டுடன் ஒப்பிடுகையில் கொரோனா சான்றிதழ்கள் செல்லாமல் போகலாம்.
தடுப்பூசி மையங்களில் அல்லது தடுப்பூசிக்காக பதிவு செய்த இணைய பக்கத்தில் நாம் பதிவு செய்தவையே சான்றிதழ்களில் பதிவாகியிருக்கும்.
இதனால் நம் கொரோனா சான்றிதழ்களை கட்டாயம் சரி பார்க்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளனர்.
சுவிஸில் தொடக்கத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும், பல நூறு பேர்கள் இதில் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட மையங்களை தொடர்பு கொண்டு, சான்றிதழ்களில் எழுத்துப் பிழை உள்ளிட்டவையை திருத்த வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.