குக் வித் கோமாளி Chef தாமு: இவ்வளவு பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கியது எப்படி? அவருடைய சொத்து!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் Chef தாமு.
யார் இந்த Chef தாமு?
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி பிறந்தார்.
படிப்பில் பெரியளவில் விருப்பம் இல்லாத காரணத்தினால் இவர் ஹோட்டல் நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து முதுகலைப் பட்டம் பெற முடிவு செய்தார்.
பள்ளிப் படிப்பையும், மேல்நிலைப் படிப்பையும் சென்னையில் முடித்துவிட்டு பேராசிரியராகவும் பணியாற்றினார்.
பின் தாஜ் கோரமண்டலில் சமையல்காரராக பணிபுரிந்தார். இங்கு பணியில் இருந்த நிலையில் பல பிரச்சினைகள் சந்தித்தார். இருப்பினும், அவர் மும்பையின் தாஜ் கோரமண்டலில் திறமையான சமையல்காரராகிறார்.
தொடர்ந்து 25 மணி நேரம் சமைத்து 617 வகையான உணவுகளை வரிசைப்படுத்தினார். இதனால் கின்னஸ் சாதனையும் படைத்தார்.
கேட்டரிங் துறையில் Ph.D. பட்டம் பெற்ற ஒரே சமையல்காரராக இவர் திகழ்கிறார். இவர் குக் வித் தாமு என்ற நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகினார்.
இதையடுத்து இறுதியில் கல்லாபடம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.
அடுத்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் உடன் நடுவர்களில் ஒருவராக பங்குபற்றியிருந்தார். இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
69 வயதுடைய இருவர் கோமாளிகளுடன் இணைந்து செய்யும் காமெடிகளினால் மக்களால் அதிகமாக வரவேற்கப்பட்டார்.
இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
சொத்து மதிப்பு
மாத வருமானம், யூடியூப் பக்கம் என சம்பாதிக்கும் Chef தாமுவின் சொத்து மதிப்பு கோடிக் கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இவருடைய நிகர மதிப்பு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |