பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
செஃப் தாமு காலமானார்
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் என்ற பெருமையைப் பெற்றவர் செஃப் தாமு.
உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கடின உழைப்பால் உயர்ந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகள் சமையல் செய்து, 617 வகையான உணவுகளைத் தயாரித்ததன் மூலம் செஃப் தாமு கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 7 அரையிறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
காலில் ஊசி போட்டதால் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தான் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சை காரணமாக அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |