குக் வித் கோமாளி சீசன் 6ல் களமிறங்கும் மூன்றாவது நடுவர்.., யார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 5வது சீசன் வரை நடந்து முடிந்துள்ளது.
அந்தவகையில், குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் ஆரம்பிக்கும் போதே, நான்கு சீசன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருந்தார்.
இந்த ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
இதில் புதிய நடுவராக செஃப் கௌஷிக் இந்த ஆண்டு இணைந்துள்ளார். மேலும், இந்த முறை கோமாளிகளாக பலர் புதிதாக இணைந்துள்ளனர்.
அதேபோல், குக்குகளாக யார் யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |