32 வயதில் தெருவில் படுத்துறங்கிய நபர்.. இன்று 41 கோடிக்கு அதிபதி: யார் அவர்?
தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக செல்வந்த வாழ்க்கையில் இருந்து இரவு பொது பூங்காவில் தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும், நம்ப முடியாத வகையில் மறுபிரவேசம் எடுத்தவர் ரன்பீர் பிரார்.
பாஸ்டன் உணவகத்தில் இருந்து வெளியேறிய ரன்வீர் பிரார்
சமையல் கலைஞரில் இருந்து சினிமா நட்சத்திரம் வரையும் உயர்ந்துள்ள ரன்வீர் பிரார் தன் வாழ்க்கையில் கடந்து வந்த இக்கட்டான சூழ்நிலைகள் குறித்து ரன்வீர் அல்லாஹ் பதியா போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது, அவரது தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு பாஸ்டன் நகரில் அவர் ஆசையாக கட்டிய உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் பிறகு கையில் பணமோ அல்லது தங்குவதற்கு வீடு இல்லாமல் வீதிக்கு வந்த ரன்வீர் பிரார், தன்னுடைய அடங்காத லட்சிய உணர்வுடன் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் மீண்டும் தன்னுடைய தொழிலை கட்டமைக்க தொடங்கிய ரன்வீர் பிரார், தன்னை ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர் மற்றும் உணவக உரிமையாளராக தன்னை உயர்த்திக் கொண்டார்.
சினிமாவில் ரன்வீர் பிரார்
பாலிவுட்டின் விருப்பமான சமையல் கலைஞராக தன்னை நிலைநிறுத்தி கொண்ட ரன்வீர் பிரார், கரீனா கபூர் கான் நடத்தி தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ் திரைப்படத்தில் நடத்தில் சினிமா துறையிலும் கால் பதித்தார்.
மேலும் பிரபலமான தொலைக்காட்சி உணவு நிகழ்ச்சியான செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சியில் நடுவராகவும் பதவி வகித்தார்.
நிகர சொத்து மதிப்பு
ரன்வீர் பிராரின் இந்த நம்பமுடியாத மறுபிரவேசம் அவரை மீண்டும் செல்வந்த வாழ்க்கைக்கு அழைத்து சென்றது.
DNA அறிக்கையில் வெளியான தகவல் படி, ரன்வீர் பிராரின் மாத வருமானம் சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.
அத்துடன் அவரது தற்போதைய நிகர மதிப்பு சுமார் ரூ.41 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        