செல்சி கோல்மழை: மரண அடி வாங்கிய போர்ன்மவுத்
Chelsea win 5-1 vs bournemouth: பிரீமியர் லீக் போட்டியில் செல்சி அணி 5-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மவுத்தை வீழ்த்தியது.
ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடந்த போர்ன்மவுத் அணிக்கு எதிரான போட்டியில், செல்சி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஜோர்டன் ஹெண்டர்சன் கோல்
செல்சி மற்றும் போர்ன்மவுத் அணிகளுக்கு இடையிலான பிரீமியர் லீக் போட்டி ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் நடந்தது.
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே செல்சி வீரர் ஜோர்டன் ஹெண்டர்சன் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே சக அணி வீரர் மோர்கன் ரோஜர்ஸ் கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதியில் செல்சி அணி முன்னிலை வகித்தது. 46வது நிமிடத்தில் செல்சியின் ஜோவோ பெட்ரோ (Joao Pedro) கோல் அடித்தார்.
செல்சி வெற்றி
ஒரு வழியாக போர்ன்மவுத் அணிக்கு 51வது நிமிடத்தில் எவனில்சன் மூலம் கோல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, செல்சியின் பெட்ரோ 67வது நிமிடத்திலும், ஜோர்டன் ஹெண்டர்சன் (Jordan Henderson) 70வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் செல்சி அணி 5-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மவுத் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் போர்ன்மவுத் அணி 4 மஞ்சள் அட்டைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
