FA Cup காலியிறுதி: கோல்மழை பொழிந்த Chelsea
FA Cup காலியிறுதிப் போட்டியில் செல்சி அணி 7-0 என்ற கோல் கணக்கில் போர்ட் வாலே அணியை வீழ்த்தியது.
ஜோர்ரேல் ஹாடோ கோல்
செல்சி மற்றும் போர்ட் வாலே அணிகளுக்கு இடையிலான FA Cup காலியிறுதிப் போட்டி ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே செல்சியின் ஜோர்ரேல் ஹாடோ (Jorrel Hato) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, சக அணி வீரர் ஜோயோ பெட்ரோ 25வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
43வது நிமிடத்தில் போர்ட் வாலே வீரர் ஜோர்டான் லாரன்ஸ் கேப்ரியல் கோல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இமாலய வெற்றி
ஆனால் அது 'சுய கோல்' ஆக மாற, செல்சி அணியின் கோல் எண்ணிக்கை உயர்ந்தது. இரண்டாம் பாதியிலும் செல்சி அணி வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
டோசின் அடரபியோயோ (57), ஆண்ட்ரே சாண்டோஸ் (69), எஸ்டேவோ (82) மற்றும் அலெஜாண்ட்ரா கார்னாசோ (90+2) ஆகியோர் கோல் அடித்தனர்.
இறுதிவரை போர்ட் வாலே அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் செல்சி அணி 7-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |