உக்ரைனில் பிரித்தானிய துருப்புகள்... ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமைச்சர்
உக்ரைனில் ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தியாதாக நிரூபணமானால், பிரித்தானியா மற்றும் நேட்டோ துருப்புகள் உக்ரைனில் களமிறங்கும் என இராணுவ அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய இராணுவ அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவிக்கையில், மேற்கத்திய நாடுகள் இந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி குறித்த பதிலை அளித்துள்ளார்.
மரியுபோல் நகர மக்கள் திடீரென்று சுசாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் Ivanna Klympush வெளிப்படுத்தியிருந்தார். ரஷ்யா கண்டிப்பாக ரசாயன ஆயுதங்களை அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தியுள்ளது என்றே தாம் கருத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி, இது உக்ரைன் விவகாரத்தில் பொறுமைகாக்கும் மேற்கத்திய நாடுகளை தூண்டிவிடும் செயல் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய நேரத்தில் நேட்டோ அமைப்பு மற்றும் பிரித்தானியா தகுந்த முடிவை முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நட்பு நாடுகள் முடிவெடுக்க தவறினாலும், பிரித்தானியா மற்றும் ஒரே கருத்துள்ள நாடுகளுடன் கண்டிப்பாக உரிய முடிவெடுக்கும் என்றார்.
அடுத்த சில நாட்களில் உக்ரைன் வீரர்கள் பிரித்தானியாவில் பயிற்சிக்காக வர உள்ளதாகவும், பிரித்தானியாவின் சிறப்பு ஆயுதங்கள் தொடர்பில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவித்துள்ளார்.