டோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி: 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை

MS Dhoni Chennai Super Kings Mumbai Indians
By Arbin Apr 21, 2022 06:33 PM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தெரிவு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2-வது பந்திலே ரோகித் சர்மாவை வெளியேற்றினார்.

தொடர்ந்து ஓவரின் 5-வது பந்தில் இஷான் கிஷன் போல்டானார். இதனால் முதல் ஓவரிலே மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

தொடர்ந்து 2-வது ஓவரை வீச வந்த முகேஷ், மும்பை அணியின் அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ஓட்டங்களில் வெளியேற்றினார். இதனால் மும்பை அணி 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறியது.

டோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி: 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை | Chennai Beat Mumabai By 3 Wickets

பின்னர் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் சாண்ட்னர் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹ்ரித்திக் தனது பங்கிற்கு 25 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கிய பொல்லார்ட், தீக்சனா பந்தில் துபே-யிடம் கேட்ச் கொடுத்து 14 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இருப்பினும் ஒரு முனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது. 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

டோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி: 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை | Chennai Beat Mumabai By 3 Wickets

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் டக் அவுட்டாகி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சான்ட்னர் 11 ஓட்டங்களில் டேனியல் சாம்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடி வந்த உத்தப்பா 30 ஓட்டங்களில் உனட்கட் பந்துவீச்சில் வெளியேற அவரை தொடர்ந்து ராயுடு 40 ஓட்டங்களில் வெளியேறினார். போட்டியின் பரபரப்பான சூழ்நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் ஜடேஜா 3 ஓட்டங்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

டோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி: 7வது தோல்வியை பதிவு செய்த மும்பை | Chennai Beat Mumabai By 3 Wickets

பின்னர் டோனி - பிரிட்டோரியஸ் ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட முதல் பந்தில் பிரிட்டோரியஸ் உனட்கட் பந்துவீச்சில் எல்பிடபில்யூ ஆனார். இரண்டாவது பந்தில் பிராவோ ஒரு ரன் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட டோனி சிக்சர் அடித்தார்.

4-வது பந்தில் பவுண்டரியை விரட்டினார் டோனி. 5-வது பந்தில் டோனி 2 ஓட்டங்கள் எடுக்க இறுதி பந்தில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி விரட்டிய டோனி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US