சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்; புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல்
chennai - bengaluru bullet train take travel time 73 minutes: சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது பயண தூரம் 73 நிமிடமாக குறையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை - பெங்களூர் புல்லட் ரயிலில் 73 நிமிடத்தில் பயணம்
பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன் தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, 4,000 கி.மீ துாரத்துக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 3,000 கி.மீ துாரத்துக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
மும்பை - அகமதாபாத் இடையிலான நாட்டின் முதலாவது புல்லட் ரயில் சேவை, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும்.
பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ள தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், அமராவதி ஆகிய நகரங்களை இணைக்க உள்ளது.

இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் போது, பெங்களூரு – சென்னை இடையிலான புல்லட் ரயில் பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக மாறும்.
தற்போது சென்னை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயிலின் பயண நேரம் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ள நிலையில், புல்லட் ரயில் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும்" என தெரிவித்துள்ளார்.