எலான் மஸ்க், சத்யா நாதெல்லாவுடன் இணைந்து பணியாற்றிய சென்னை தமிழர்: யாரிவர்
மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்ட உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் பல இந்தியர்கள் பணிபுரிந்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுகிறார்கள்.
வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு முதலீடு
அப்படியான ஒரு நபர் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன். உலகின் முதன்மை தலைமை நிர்வாக அதிகாரிகளான Meta-வின் மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் ஆகியோருடன் ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றியுள்ளார்.
தற்போது வளர்ந்துவரும் நிறுவனங்களுக்கு முதலீடு செய்பவராகவும் Andreessen Horowitz என்ற நிறுவனத்தின் இன்னொரு பங்குதாரராகவும் இவர் செயல்பட்டு வருகிறார். 2013ல் Meta-வின் மார்க் ஜுக்கர்பெர்க் உடன் ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றியுள்ளார்.
சமூக ஊடகமான டுவிட்டர் பக்கத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 2007ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்த இவர் சில ஆண்டுகள் சத்யா நாதெல்லாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி
அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் கிருஷ்ணன சில ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றியுள்ளார். 2001- 2005ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள கிருஷ்ணன், 2022ல் எலான் மஸ்க் தலைமையில் டுவிட்டர் செயல்பட தொடங்கிய போது, அந்த நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
மட்டுமின்றி தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் படைப்பாளிகள் தொடர்புடைய போட்காஸ்ட் ஒன்றையும் நடத்துகிறார். 2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் இவரது சொத்து மதிப்பு 10 முதல் 12 மில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |