ரூ.823 கோடியில் சென்னையில் உருவாகும் நவீன பேரூந்து நிலையம் - மாதிரி புகைப்படம் இதோ...
சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த பேருந்து நிலையமான பிராட்வே பேரூந்து நிலையத்தை, ரூ.823 கோடி செலவழித்து நவீன வசதியுடன் சீரமைத்து கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.823 கோடியில் சென்னையில் நவீன பேரூந்து நிலையம்
கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து பிராட்வே பேரூந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது.
இந்த தரிப்பிடத்தில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேரூந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பிராட்வேயில் மாநகர பேரூந்துக்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
பழமை வாய்ந்த அந்த பேரூந்து நிலையத்தை மேம்படுத்தி தருமாறு பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைத்திருந்தனர். அதையடுத்து தற்போது ரூ.823 கோடி செலவில் புதிய பேரூந்து நிலைய் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு கட்டுமான பணிகள் நடைபெறவிருப்பதால் தீவுத்திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.
பின் பிராட்வே பேரூந்து நிலையம் இடிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பேரூந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.
குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்படவுள்ளதாகவும் இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள பேரூந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 4 மாதிரிகளும் அதில் இருந்து ஒன்று தெரிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |