பிளிப்கார்ட் ஒரே நாள் டெலிவரி சேவை: சென்னை, கோவை உட்பட 20 நகரங்களில் அறிமுகம்
பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த அன்றே பொருட்களை டெலிவரி செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய டெலிவரி வசதி
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலகட்டத்தில் நமது கை விரல் நுனியில் அனைத்துமே கிடைத்துவிடும் அளவிற்கு சூழ்நிலைகள் மாறிவிட்டது.
அதிலும் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதியாக அமைந்து விட்டது.
இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்துடன் இணைந்த பிளிப்கார்ட் நிறுவனம் பொருட்களை ஆர்டர் செய்த அன்றே டெலிவரி செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இந்த வசதி இந்தியாவில் உள்ள 20 நகரங்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் பிற்பகல் 1 மணிக்கு முன்னதாக ஆர்டர் செய்யும் பொருட்களை அன்றைய நள்ளிரவுக்குள் டெலிவரி செய்யப்படும் என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக தனியான சிறப்பு கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களின் பட்டியல்
டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கவுகாத்தி, லூதியானா, நாக்பூர், சிலிகுரி, விஜயவாடா மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 20 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படுவதாக பெங்களூரு தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் பட்டியல்
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பூர்த்தி மையங்களில் கிடைக்கும் சில மில்லியன் ஸ்டாக் கீப்பிங் யூனிட்களில் (SKUs) இருக்கும் பொருட்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக மொபைல் போன்கள், , ஃபேஷன், அழகு சாதனப் பொருட்கள், வாழ்க்கை முறை, புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |