ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக வழங்கிய சென்னை நிறுவனம்
பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ், ஊதிய உயர்வு என வழங்கி வருகின்றன.
ஆனால் சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு ஆடி கார் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கு ஆடி கார் வழங்கிய நிறுவனம்
சென்னையை சேர்ந்த Refex Group என்ற நிறுவனம், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, மருத்துவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்ட தனது ஊழியர்களுக்கு wheels of Achievement என்ற பெயரில் 12 ஊழியர்களுக்கு A4 மாடல் ஆடி காரை பரிசாக வழங்கியுள்ளது.
12 ஊழியர்களும் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆடி கார்களை பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிறுவனங்கள் இது போன்று ஊழியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்க வேண்டும் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
2002 ஆம் ஆண்டில் அணில் ஜெயின் என்பவர் இந்த நிறுவனத்தை தொடங்கினார். தினேஷ் அகர்வால் அதன் CEO ஆக உள்ளார்.
ஆடி A4 மாடல் காரின் விலை 47 முதல் 56 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |