சென்னையில் தொடரும் பயங்கரம்! இளைஞர் துடிதுடிக்க வெட்டிக்கொலை.. பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை கொருக்குப்பேட்டையில் 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
மே 18ம் திகதி கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 19 வயதான ராகுல் என தெரியவந்தது. மேலும், போதை மாத்திரை வாங்கி தருவதாக ஏமாற்றியதற்காக ராகுதலை கௌரிசங்கர் (வயது 25), சரவணன் (வயது 20), ரகுமான் (வயது 20) ஆகிய 3 பேர் வெட்டிக்கொன்றது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து, 3 பேரையும் ஆர்கே நகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ராகுதல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மே 18ம் திகதி இரவு 8 மணி அளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ராகுலை பின்புறமாக மடக்கி பிடிக்க, மற்றொருவர் கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்க்கிறார்.
இதனையடுத்து, இருவரும் இரு சக்கர வாகனத்தில் சம்பவயிடத்திலிருந்து தப்பிச் செல்கின்றனர்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....
மே 18ம் திகதி அதே நாள் பட்டப்பகலில் சென்னை அமைந்தகரையில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகம் என்ற நபரை நான்கு பேர் வழிமறித்து நடுரோட்டில் சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து கொலை சம்பங்கள் இடம்பெற்று வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே! சீமான் காட்டம்