வெறும் ரூ.100 மட்டுமே !..நாள் முழுக்க சென்னையை மெட்ரோவில் சுற்றி பார்க்கலாம்
சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த மெட்ரோ நிறுவனம் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக வார இறுதி நாட்களில் குறைந்த கட்டணம், அதிகாலை முதல் நள்ளிரவு வரை மெட்ரோ என்று பல வசதிகளை கொண்டு வந்துள்ளது.
இதனால் மெட்ரோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது.
ஒரு நாள் சுற்றுலா அட்டை
இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ.100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.
"ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டும் சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக வசூலிக்கப்படுகிறது.
ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி மெட்ரோ வழித்தடங்களில் நாள் முழுக்க பயணித்துக் கொள்ளலாம். இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான்.
அந்த வகையில், பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ.50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
இது வார இறுதியில் சென்னைக்குள் ஒரு நாள் சுற்றுலா, அல்லது குழந்தைகளோடு வெளியே செல்ல நினைக்கும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
சென்னையில் வேலைக்கு செல்வதற்காகவோ அல்லது ஒரு நாள் சுற்றுலா செல்லும் மக்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த அட்டை விநியோகிக்கப்படும்.அனைத்து மெட்ரோ ஸ்டேஷன் கவுண்ட்டர்களிலும் இந்த அட்டை கிடைக்கும்.
ஒரு நாள் பயண அட்டையை போலவே 30 நாட்களும் பயணம் செய்யும் வகையில் ஒரு மாத அட்டையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஒரு மாத அட்டைக்கான கட்டணம் ரூ.2550 இதிலும் 50 ருபாய் வைப்புத்தொகை ரூ2500 பயணத்திற்கு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |