வெளியே செல்வது பாதுகாப்பு அல்ல.! மிக கனமழை பெய்யும்., சென்னைக்கு அருகில் வரும் மிக்ஜாம் புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் சென்னைக்கு தென் கிழக்கே 190 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு நேர் கிழக்கே 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டது.
இது அடுத்து வரும் மணிநேரங்களில் 5கிமீ வேகத்தில் தொடங்கி மெல்ல மெல்ல நகர்ந்து, நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணி முதல் 4 மணியளவில், சென்னைக்கு மிக அருகில் நேர் கிழக்கில் 100 கிமீ தொலைவில் புயலின் மையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இப்போது பெய்துகொண்டிருக்கும் மழை படிப்படியாக அதிகரிக்கும், காற்றின் வேகமும் அதிகரிக்கும்.
இப்போது, மிதமான மழைக்கு நடுவே கனமழை பெய்யும் நிலை மாறி, தொடர்ந்து கனமழை பெய்யும், இடையில் மிதமான மழை பெய்யும்.
அதேபோல் காற்றானது, தொடர்ந்து வடக்கிலிருந்து வீசும், புயல் சென்னையை தாண்டும் பொழுது வடக்கு, வடமேற்கிலிருந்து கிழக்கு அதாவது புயலை நோக்கிய காற்று வீசும். இதனால் புயல் வராது. மழைப்பொழிவு விடிய விடிய பெய்யும்.
நாளை (திங்கட்கிழமை) காலை 8 முதல் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை மிக கனமழை பெய்யும், இந்த மழை மலை 5 மணிக்கு மேல் தான் மிதமான மழையாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியுள்ளார்.
பெரும் புயல்காற்று வீசாது, அனால், கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழையும் மிதமான மழையும் மாறிமாறி பெய்துவரும் நிலையில், மரங்கள் வெறும் சாயும் அபாயம் இருக்கிறது. இதனால், மக்கள் வெளியே செல்வது பாதுகாப்பானது அல்ல என செல்வகுமார் கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மிக்ஜாம் புயல், சென்னைக்கு மிக்ஜாம் புயல், michaung cyclone update, michaung cyclone chennai