இதுக்கு பேரு என்ன மைதானமா? பார்க்கவே பயங்கரமா இருக்கு...டேவிட் வார்னர் கடும் விமர்சனம்
ஹைதராபாத் அணியின் கேப்டன் ஆன, டேவிட் வார்னர், சென்னை மைதானம் மிகவும் மோசமாக உள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி, நேற்று பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் டேவிட் வார்னர் சென்னை மைதானம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், உண்மையை கூற வேண்டும் என்றால், சென்னை மைதானம் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக தொலைக்காட்சியில் பார்க்கும் போது, மைதானம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது.
இதில் மைதான தயாரிப்பாளர்களை நாம் குறை கூற முடியாது. ஏனெனில் இவ்வளவு போட்டிகள் ஒரே மைதானத்தில் நடக்கும் போது, அவர் என்ன செய்ய முடியும்,.
நான் எப்போது சென்னையில் ஆடினாலும், இந்த மைதானம் இப்படி தான் உள்ளது.
கடினம் தான்,இருப்பினும் விளையாடி தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.