போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பொலிஸார் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உட்பட ஏழு பேர் கஞ்சா விநியோகித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த தனிப்படை பொலிஸார் துப்பு துலக்கியதைத் தொடர்ந்து, பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கின் (26) செல்போன் எண் இருந்துள்ளது.
பின்னர் அலிகான் துக்ளக்கிடம் நேற்று முழுவதும் திருமங்கலம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அலிகான் துக்ளக் உட்பட கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் 4 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |