3 நாட்களாக சோறில்லை.. சுத்தி சாக்கடை தண்ணீர்: வேதனையில் சென்னை மக்கள்
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் உணவு இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் 4 நாள்களாக தீவு போல காட்சியளிக்கிறது.
குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வளசரவாக்கம் பாதிப்பு
சென்னையில் பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் சில பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று கூட பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்தவகையில், சென்னையில் உள்ள வளசரவாக்கம் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உணவு, மின்சாரம் இல்லாமலும், குழந்தைகளை பாதுகாக்க முடியாமலும், பொருட்சேதம் ஏற்பட்டும் அவதிப்பட்டுள்ளனர். அப்பகுதிமக்கள் வைத்த கோரிக்கைகளை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |