மும்பையை அசால்ட்டாக தட்டித்தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

Cricket Mumbai Indians Indian Premier League Chennai Super Kings IPL 2020
By Ragavan Sep 19, 2021 06:04 PM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசால்டாக வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்த வருட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டி துபாயில் இன்று துவங்கியது.

முதல் பாதியில் 29 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 30-வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டூபிளசிஸ் (0), மொய்ன் அலி (0), ரெய்னா (4), தோனி (3) என சீனியர் வீரர்கள் அனைவரும் மிக சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், இறுதி வரை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் எடுத்து கொடுத்தார்.

மும்பையை அசால்ட்டாக தட்டித்தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்! | Chennai Super Kings Defeat Mumbai Indians Ipl2020Picture: ANI

அவரைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய பிராவோ 8 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 156 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் ட்ரென்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி, துவக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக சவ்ரப் திவாரி அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடி இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது.

மும்பையை அசால்ட்டாக தட்டித்தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்! | Chennai Super Kings Defeat Mumbai Indians Ipl2020Picture: SPORTZPICS

சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளர்களில் டுவைன் பிராவோ 3 விக்கெட்களையும், பக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திலிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அபுதாபியில் நாளை நடக்க உள்ள 31-வது ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலன்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டி இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US