டோனி இன்னும் 3 சீசன்களில் விளையாடலாமே... ரோஹித் சர்மா கருத்து...!
டோனிக்கு இருக்கும் உடல் தகுதிக்கு அவர் இன்னும் 3 சீசன்களில் விளையாடலாம் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி -
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
டோனியின் கடைசி ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் டோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக கூட இருக்கலாம். அதனால், ரசிகர்கள் டோனியை கடைசியாக ஒரு முறை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்ற வெறியில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்துள்ளனர்.
ஆனால், சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தோனி திரும்ப வந்துள்ளார். நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க சென்னை சேப்பாக்கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ரோஹித் சர்மா கருத்து
இந்நிலையில், டோனிக்கு இருக்கும் உடல் தகுதிக்கு அவர் இன்னும் 3 சீசன்களில் விளையாடலாம் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில்,
டோனிக்கு இது கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை. அவருக்கு உள்ள உடல் தகுதிக்கு இன்னும் 2 அல்லது 3 சீசனுக்கு விளையாடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த டோனி ரசிகர்கள் டோனி இன்னும் சில சீசன்களில் விளையாட வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.