தோனி இத்தொடரில் பட்டைய கிளப்புவார் - வாட்சன் நம்பிக்கை
தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம். இதனால், அவர் யாரென்று நிரூபிக்கும் கட்டத்தில் இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நாளை முதல் மே 28-ம் திகதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
டோனியின் கடைசி ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் டோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக கூட இருக்கலாம். அதனால், ரசிகர்கள் டோனியை கடைசியாக ஒரு முறை மைதானத்தில் பார்க்க வேண்டும் என்ற வெறியில் டிக்கெட்டுகளை வாங்கி குவித்துள்ளனர்.
ஆனால், சென்னையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தோனி திரும்ப வந்துள்ளார். நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தை பார்க்க சென்னை சேப்பாக்கத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
வாட்சன் நம்பிக்கை
கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி சந்தித்தது. புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது. இதுவரை சென்னை அணி 2 முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் இருந்தது.
இந்நிலையில், தோனிக்கு இந்த ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம். இதனால், அவர் யாரென்று நிரூபிக்கும் கட்டத்தில் இருக்கிறார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து, வாட்சன் பேட்டியில் கூறுகையில்,
சிஎஸ்கே அணி இந்த சீசனில் சிறப்பாகவே விளையாடுவார்கள். இந்த அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை தோனி, ஸ்டீபன் சிறப்பாக வழி நடத்துவார்கள். சிஎஸ்கே அணி எப்படி செயல்பட போகிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். என் கிரிக்கெட் வாழ்க்கை முடியும்போது, நான் சிஎஸ்கேவில் விளையாடினேன். தோனி யாரை எப்போது பயன்படுத்துவார்? என்று எனக்கு தெரியும்.
அந்த 3 ஆண்டுகள் என் வாழ்நாளில் சிறப்பானதாக இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதுமே ஸ்பெஷல். தோனிக்கு இது கடைசி சீசன் என்று சொல்வதை என்னால் ஏற்கவே முடியவில்லை. தோனிக்கு நல்ல உடல் தகுதி இருக்கிறது. அவர் தொடர்ந்து பயிற்சி செய்து வந்திருக்கிறார்.
இந்த தொடருக்காக அவர் நீண்ட காலமாக ஆயத்தமாக உள்ளார். தோனிக்கு ஒரு பெரிய விஷயத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். நிச்சயம் அவர் நிரூபிப்பார். ஏனென்றால் அவரால் அது முடியும் என்றார்.