சேப்பாக்கம் மைதானத்தில் எண்ட்ரி கொடுத்த தோனி- அலைகடலாய் ஆர்ப்பரித்த ரசிகர்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி எண்ட்ரி கொடுத்தவுடன் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்ப்பரித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாஸா எண்ட்ரி கொடுத்த தோனி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்ததால், இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை காண ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர்.
2019க்குப் பிறகு புதுப்பொலிவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் வந்து சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர்.
4 வருடங்களுக்கு பிறகு தோனியை மைதானத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் தோனி எண்ட்ரி கொடுத்ததும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அலைக்கடலாக எழுந்து ஆர்ப்பரித்தனர்.
ரசிகர்களின் கைத்தட்டலுடன், கூச்சலுடன் அரங்கமே ஒரு கணம் அதிர்ந்து போனது. மாஸாக நடந்து வந்த தோனி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The entry of MS Dhoni into Chepauk after 4 long years. pic.twitter.com/7YP60XWXlU
— Johns. (@CricCrazyJohns) April 4, 2023
When THALA comes to bat, DJ played - "Once upon a time, there lived a ghost" . The shadow effect makes it ?? and he smashed two massive sixes ???.@MSDhoni | #Dhoni
— ????? (@Vidyadhar_R) April 3, 2023
VC: owner :) pic.twitter.com/zn5NKBz35O
Thala Dhoni entry and first 6?? pic.twitter.com/oo82IUTmaG
— Sreenivas || ஸ்ரீநிவாஸ் (@i_sreenivas) April 3, 2023