சிஎஸ்கே ரசிகரை தாக்கிய கும்பல் - வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் கண்டனம்!
சிஎஸ்கே ரசிகரை தாக்கிய கும்பலின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3-வது முறையாக வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இப்போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில், இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது. இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது முறையாக வெற்றி பெற்றது.
சிஎஸ்கே ரசிகரை தாக்கிய கும்பல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
சிஎஸ்கே ரசிகர் ஒருவர், தோனி என்ற வாசகத்துடன், மஞ்சள் நிறத்தில் உடல் முழுவதும் பெயிண்ட் அடித்து போட்டியை காண்பதற்காக வந்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை சராமரியாக தாக்குகிறது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து, கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
What is this behaviour? Why they're beating this man who Painted himself in Yellow colour and Wrote DHONI name on his Body?
— Mihika Singh (@Stars_ki_Duniya) April 18, 2023
CV: SM#MSDhoni? #CSK #ChennaiSuperKings #Thala pic.twitter.com/Nd7kHX7WBT