ஐபிஎல் - மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடு
மும்பை வான்கடே மைதானத்தில் 2 கேலரிகளில் எம்.ஐ. (MI) ரசிகர்கள் தவிர வேறு யாரும் வர அனுமதி கிடையாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை - சென்னை அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்னை சூப்பர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடியபோது, சிஎஸ்கே ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.
ரசிகர்களுக்கு கட்டுப்பாடு
இந்நிலையில், ஐ.பி.எல்.போட்டியில் வான்கடே மைதானத்தில் சி.எஸ்.கே. ரசிகர்கள் அதிகமாக கூடுவதால், மைதானமே மஞ்சள் வண்ணத்துக்கு மாறி விடும் என்பதற்காக மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தற்போது மி ஃபேன் ஜும் (Mi FAN Zone) என இரு கேலரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேலரிக்குள் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இத்தகவல் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சி.எஸ்.கே. ரசிகர்கள், நேத்து வரைக்கும் கிரவுண்டுக்கு வந்து மேட்ச் பாருங்கனு கேட்டுட்டு இருந்த இப்போ, MI Fan Zone லாம் போடற அளவுக்கு வந்துட்டாங்கப்பா... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.