CSK ரசிகர்கள் ரெடியா? சேப்பாக்கம் டிக்கெட் விற்பனை திகதி வெளியீடு
ஏப்ரல் 12ம் தேதி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் சமீபத்தில் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் 20 ஓவர்களில், சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 217 ஓட்டங்களை குவித்தது. இதனையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் முதல் வெற்றியை பதித்தது.
@TrendsDhoni
டிக்கெட் விற்பனை தேதி வெளியீடு
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 12ம் திகதி, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.
இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் ஏப்ரல் 9ம் திகதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. C,D,E,I,J,K ஸ்டாண்ட்களில் ரூ.1500 முதல் ரூ.3000 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Ticket sales for Chennai Super Kings vs Rajasthan Royals match on April 12. pic.twitter.com/aHoOltjOuR
— Venkata Krishna B (@venkatatweets) April 7, 2023