கடைசி லீக் போட்டியில் விளையாட டெல்லி புறப்பட்டார் தோனி - வைரலாகும் வீடியோ!
நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி லீக் போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லி புறப்பட்டார் தோனி
தற்போது 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சூடு பிடித்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. தற்போது, 7 வெற்றியும், 5 தோல்வியும் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. இப்போட்டியில், கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இந்த போட்டி முடிந்த பிறகு தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், நாளை மறுநாள் டெல்லியுடன் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
MS Dhoni and family along with CSK team off to Delhi ??@MSDhoni #IPL2023 #WhistlePodu pic.twitter.com/aRGhL1LWfB
— DHONI Era™ ? (@TheDhoniEra) May 18, 2023