சேப்பாக்கத்தில் சென்னை-லக்னோ அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல் - உற்சாகத்தில் ரசிகர்கள்
இன்று சேப்பாக்கம் சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - லக்னோ அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடர் சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்
இந்நிலையில், 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 7 மணிக்கு 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் நேருக்கு நேர் மோத உள்ளன.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
? CLASH DAY! With a solid start Lucknow Super Giants are about to play against Chennai Super Kings in their den.
— The Bharat Army (@thebharatarmy) April 3, 2023
? Can Super Kings register their first win in the #IPL2023 today?
? BCCI • #CSKvsLSG #IPL #TATAIPL #BharatArmy pic.twitter.com/AIfkxasFKT