ஐபிஎல் 2022! CSK அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் புதிதாக சேர்ப்பு... தோனியின் அசத்தல் திட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிய பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் தொடர் வரும் 26ம் திகதி தொடங்கி மே 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையும் வெளியாகிவிட்டன.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பயிற்சியை தொடங்கிவிட்டது. அணியில் புதிதாக ஒரு வீரரும் இணைக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்தை சேர்ந்த ஜோஸ் லிட்டில் என்ற 22 வயது வேகப்பந்துவீச்சாளர், இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கேவுக்கு வலைப்பயிற்சி பவுலராக செயல்படவுள்ளார். அணியின் முன்னணி பவுலரான தீபக் சஹாருக்கு காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல்-ன் முதல் பாதி தொடரில் இருக்க மாட்டார் எனத்தெரிகிறது. எனவே அவரின் இடத்திற்கு ஜோஸ் லிட்டிலை கூட கொண்டு வரலாம். சஹாரிடம் உள்ள அத்தனை சிறப்பம்சங்களும் ஜோஸ் லிட்டிலிடம் உள்ளது.
எனவே புதிய வீரரை அணிக்குள் கொண்டு வந்துள்ள தோனியின் திட்டம் சென்னை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகிறது.