மைதான இருக்கைக்கு வண்ணம் பூசிய டோனி! ரசிகர்கள் நெகிழ்ச்சி
சேப்பாக்கத்தில் உள்ள மைதான இருக்கைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல டோனி வர்ணம் பூசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
விடை கொடுக்கிறார் டோனி
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக டோனி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இருக்கைக்கு வண்ணம் பூசிய தல டோனி
மகேந்திர சிங் டோனியை களத்தில் காண அவருடைய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலாக உள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கிரிக்கெட் மட்டுமின்றி மைதானத்திலும் டோனி உழைத்து வருகிறார். சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தனது அணியுடன் கலந்து கொண்டு டோனி மைதானத்தின் இருக்கைகளுக்கு வர்ணம் பூசி வேலை பார்த்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நெகிழ்ச்சியில் வியந்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ அதிகளவில் டுவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
“?????????? ??????? ???????”
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
Anbuden Awaiting for April 3?? pic.twitter.com/eKp2IzGHfm
@msdhoni painting at stadium.....
— demo_space930 (@demo_space930) March 27, 2023
Down to earth man ?❤️?#MSDhoni #MSDhoni? #MSD #Dhoni #IPLtickets #IPL #IPLonJioCinema #cskvsgt pic.twitter.com/i1nw9axS1z