நியூயார்க், லண்டனை போல சென்னைக்கு வரவிருக்கும் ராட்சசன்! பொழுதுபோக்கு பூங்கா ரசிகர்கள் உற்சாகம்
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டருடன் சென்னையில் விரைவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்
பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா,(Wonderla Theme Park) தற்போது சென்னையிலும் தனது பிரமாண்டமான தோற்றத்தை வெளிப்படுத்த உள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட உள்ள இந்த பூங்கா, இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டரை(India's Largest Roller Coaster) கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்களைப் போலவே, சென்னையின் வொண்டர்லாவில் உள்ள ரோலர் கோஸ்டரும் மிகப் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பொழுதுபோக்கு பூங்கா அமைவிடம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 62 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த பூங்கா, சுமார் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
பூங்காவில் ரோலர் கோஸ்டர் மட்டுமின்றி, பல்வேறு வயதுடையவர்களுக்கான தண்ணீர் சவாரிகள், கேம்ஸ், உணவகங்கள் மற்றும் ஓய்வு இடங்கள் என பல்வேறு வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து வொண்டர்லா நிறுவனம் கூறுகையில், தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சுற்றுலா கொள்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |