சென்னை – சூரத்; நாட்டின் 2வது பெரிய சாலை எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வழியாக குஜராத் வரை செல்லும் சென்னை – சூரத் எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை – சூரத்
இந்த வழித்தடம் சென்னை, திருப்பதி, கடப்பா, குர்னூல், கலபுர்கி, சோலாபூர், அகமது நகர், நாசிக், சூரத் ஆகிய நகரங்களை இணைக்கிறது.

இது பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் இரு நகரங்களுக்கும் இடையிலான பயணம் 35 மணி நேரத்தில் இருந்து 16 மணி நேரமாக குறையும். கிட்டதட்ட 50 சதவீதத்திற்கும் கீழ் நேரம் குறைந்து விடுவதால் விரைவாக பயணிக்க முடியும்.
6 வழிச் சாலையாக அமைக்கப்படும் சென்னை – சூரத் எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேக பயணம் மேற்கொள்ளலாம். தற்போது ஆந்திரா மாநிலங்களில் திருப்பதி, ரேணிகுண்டா அருகில் வேகமாக பணிகள் நடந்து வருகின்றன.
திட்டப் பணிகள்
கர்நாடகாவில் 4ஆம் கட்ட பேக்கேஜ் பணிகள் நடந்து வருகின்றன. இது அடுத்த சில வாரங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. தொடர்ந்து நடப்பாண்டின் முதல் பாதியில் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சாலை பகுதிகளில் திறந்து விடப்படும்.

முழு சாலையும் ஜனவரி 2027ல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையானது இந்தியாவின் 2வது மிகப்பெரிய நெடுஞ்சாலை என்ற பெருமையை பெறவுள்ளது. முதலிடத்தில் டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்வே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.