ஜேர்மனி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் அந்த பொருள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
ஜேர்மனி, இந்தியாவிலிருந்து இசைக்கருவிகளை இறக்குமதி செய்வதாக ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கு இசைக்கருவிகளை ஏற்றுமதி செய்யும் தமிழ்நாடு
இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து, குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சீபுரம் ஆகிய இடங்களிலிருந்தும், கொல்கொத்தாவிலிருந்தும் இசைக்கருவிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரம், கிட்டார் மற்றும் புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள், பல நாடுகளில் விரும்பி வாங்கப்படுகின்றனவாம்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, கிட்டார், வீணை மற்றும் வயலின் ஆகிய இசைக்கருவிகள் காஞ்சீபுரம் மற்றும் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
கோவிட் காலகட்டத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடந்த நேரத்தில் இசைக்கருவிகள் கற்கும் ஆர்வம் அதிகரித்ததால், இசைக்கருவிகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது.
இந்திய இசைக்கருவிகள் மீது ஆர்வம் காட்டும் பிற உலக நாடுகள்
ஜேர்மனி மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் அதிக அளவில் இந்திய தயாரிப்பான இசைக்கருவிகள் மீது ஆர்வம் காட்டிவருகின்றன.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், மிக அதிக அளவில் இந்தியாவிலிருந்து இசைக்கருவிகளை இறக்குமதி செய்த நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.