தம்பதியின் சொத்தை அபகரித்த தமிழ் நடிகை! கண்ணீருடன் அளித்துள்ள புகார்
சென்னையில் உள்ள தங்களின் சொத்துக்களை நடிகை ஒருவர் ஆக்கிமிரப்பு செய்துள்ளதாக வயதான தம்பதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் கணபதி தெருவில் வசித்து வருபவர்கள் மணி (71) கஸ்தூரி 70) என்ற வயதான தம்பதியினர். இவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், கடந்த 1978ஆம் ஆண்டு மேற்கு மாம்பலத்தில் சுமார் 3,000 சதுர அடியில் சொந்தமாக குடியிருப்பு கட்டி வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பில் வாடகைக்கு விட்டு வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். நகை செய்யும் தொழில் செய்து வந்த தனது கணவர் சமூக சேவைகள் செய்து வந்ததாகவும்,அதன் மூலம் ருக்மணி என்ற துணை நடிகை பழக்கமாகியுள்ளதாகவும் அதன் பிறகு ருக்மணி மசாஜ் பார்லர் நடத்தி வந்ததாகவும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ,அவருடனான பழக்கத்தை மணி நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் 50 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் எனவும் இல்லையென்றால் பொய் வழக்கில் சிறையில் தள்ளி விடுவோம் என ருக்மணி மிரட்டியதாகவும் இதற்கு பொலிசாரே உதவியாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தாங்கள் வசித்து வரும் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்பதாலும், இடியும் தருவாயில் இருக்கின்ற காரணத்தினால், இடிப்பதற்காக சென்னை மாநகராட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.
மேலும், வீட்டை இடிக்க விடாமல் நடிகை தடுத்து வருவதாகவும் தம்பதி புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.