குப்பையிலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளம்பெண்: சாதித்தது எப்படி?
தமிழகத்தில் குப்பைபொருட்களை மறு சுழற்சி செய்யும் தொழில் மூலம், இளம்பெண் ஒருவர் பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளார்.
குப்பைகளை பணமாக்கும் தொழில்
தமிழகத்தில் சென்னையை சேர்ந்த ஆன் அன்ரா என்ற பெண், குப்பைகளின் மூலமாக பணம் ஈட்டும் புதிய தொழில் செய்து சாதனை படைத்துள்ளார்.
@wasted360
WASTED 360 என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம், ஆன் அன்ரா என்பவரால் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நாம் குப்பைகளாக போடப்படும் பொருட்கள், மறு சுழற்சி செய்து விற்பனை செய்யப்படுகிறது.
@dwtamil
குறிப்பாக கண்ணாடி பாட்டில்கள், தடிமனான நெகிழி பைகள், துணிகள் போன்றவை மறுசுழற்சி செய்து, அவர்களே விற்பனை செய்கின்றனர்.
மறு சுழற்சியில் பாரிய வருமானம்
நம் அன்றாட பயன்பாட்டில் போடப்பட்டும் குப்பைகள், மலைகளை போல் குப்பை கிடங்குகளில் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் சில பொருட்கள் மக்குவதற்கு, நூறு ஆண்டுகள் கூட ஆகலாம்.
அது மாதிரியான பொருட்களை மறு சுழற்சி செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தான், தங்களது திட்டம் என்று WASTED 360 நிறுவனத்தின் நிறுவனர் ஆன் அன்ரா தெரிவித்துள்ளார்.
@dwtamil
இதில் குறிப்பாக துணிகளை மறுசுழற்சி செய்து புத்தம் புதிய துணிகளை போல், மலிவான விலைக்கு விற்பனை செய்யும் போது, மக்கள் அதனை விரும்பி பெறுகின்றனர் என்கிறார்.
@dwtamil
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய ஆன் அன்ரா, இந்த தொழிலின் மூலம் பாரிய வருமானம் எடுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற மறு சுழற்சி மூலம், பூமியை சீரழிக்கும் மக்காத குப்பைகளின் அளவை குறைக்க முடியும் என கூறுகிறார்.