தனி ஆளாக போராடிய ரோகித்... சென்னையிடம் வீழ்ந்தது மும்பை
இன்று நடந்த 29வது லீக் ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை.
4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்கள்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் 69 ஓட்டங்களும் துபே 66 ஓட்டங்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அனியில், தொடக்க வீரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் குவித்தது. இந்த ஜோடியை பத்திரனா பிரித்தார். இஷான் கிஷன் 23 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் அந்த ஓவரிலேயே 0 ரன்னில் வெளியேறினார்.
தனி ஆளாக போராடிய ரோகித்
இதனையடுத்து ரோகித் - திலக் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய ரோகித் 30 பந்தில் அரை சதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய திலக் 30 ஓட்டங்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டிம் டேவிட் 13, ஷெப்பர்ட் 1 என வெளியேறினர். தனி ஆளாக போராடிய ரோகித் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் மும்பை அணி 186 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |