சென்னையில் திறக்கப்படும் மிகப்பெரிய WONDERLA பூங்கா.., டிக்கெட் விலை எவ்வளவு?
சென்னையில் புதிதாக கட்டுப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா வரும் டிசம்பர் 2ஆம் திகதி துவங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் 611 கோடி ரூபாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
43 உலக தரம் வாய்ந்த சவாரிகள், உயர் திரில் ரைடுகள், குடும்பம், குழந்தைகள் மற்றும் நீர் விளையாட்டுகள் என்ற பல பிரிவுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொண்டர்லா சென்னைக்கான அடிப்படை விலை டிக்கெட்டுகள் 1489 ரூபாய்க்கு துவங்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும், கல்லூரி ஐடியை மாணவர்களுக்கு 20% சலுகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவாரிகள் மட்டுமின்றி உணவு அரங்குகள், நிகழ்ச்சிகள், சில்லறை விற்பனை சலுகைகள், கைவினை மரபுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 1ஆம் திகதி வொண்டர்லாவை திறந்து வைக்கிறார். மேலும், 2ஆம் திகதி முதல் பொதுமக்கள் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் டிக்கெட்டின் விலை ரூ.1,489 (ஜி.எஸ்.டி உட்பட) எனவும், குழந்தைகளுக்கு 20% தள்ளுபடி, வார இறுதி நாட்களில் ரூ.1,789 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் நாளான டிசம்பர் 2ஆம் திகதி மட்டும் ரூ.1,199 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |