பிரான்ஸ் அழகியை கரம்பிடித்த தமிழர்: தமிழ் முறைப்படி நடந்த திருமணம்
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் பெண்ணை காதலித்து, தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
பிரான்சில் மலர்ந்த காதல்
தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்சிற்கு கல்லூரி படிப்பிற்காக சென்றுள்ளார்.

அங்கு பிரெஞ்சு பெண்ணொவரை சந்தித்து நட்பாக பழகியுள்ளார். பின்னாளில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
தங்கள் காதல் குறித்து இருவரும் பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்களின் சம்மதத்துடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது.
முதலில் சம்மதிக்கவில்லை
திருமணம் குறித்து பேசிய மணமகன், எங்கள் வீட்டில் முதலில் சம்மதிக்கவில்லை. பின்னர் பிரான்ஸின் கிராமங்களில் பண்பாடு, கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்கள் இருக்கிறார்கள்.

அப்படியொரு பெண்தான் தனது காதலி என்று கூறினேன். அதன் பின்னர் அவர்களும் புரிந்துகொண்டு சம்மதம் தெரிவித்தனர் என்றார்.
அதேபோல் மணமகள் கூறும்போது, தமிழ் கலாச்சாரம் தங்களது கலாச்சாரத்தை விட வித்தியாசமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |