தேங்காய் நாரை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை அள்ளும் சென்னைவாசி.., அதை வைத்து அப்படி என்ன செய்கிறார்?
குப்பையில் தூக்கி வீசப்படும் தென்னை நாரை வைத்து சென்னை இளைஞர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
யார் அவர்?
சென்னையைச் சேர்ந்த குளோபல் கிரீன் காயர் (Global Green Coir) நிறுவனர் அனீஸ் அகமது. இவர் தென்னை நாரை சிறப்பான முறையில் வர்த்தக்கப்படுத்தி நல்ல வருமானம் பெறுகிறார்.
இந்த நிறுவனமானது உலகம் முழுவதும் கோகோ பீட்டை ஏற்றுமதி செய்து ஒரு ஆண்டுக்கு ரூ.75 கோடி வருவாயை பெறுகிறது. அதுவும், இந்திய அளவில் பார்க்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனீஸ் அகமது தான் கோகோ பீட் உற்பத்தியில் மிகப்பெரிய சப்ளையர் மற்றும் உற்பத்தியாளர் என்ற நிலைக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அனீஸ் அகமது கூறுகையில், "குப்பையாக நினைக்கப்பட்ட கோகோ பீட்டின் சந்தை சர்வதேச அளவில் உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மண்வளம் குறைவாக இருப்பதால் அங்கு அதிக அளவு டிமாண்ட் உள்ளது.
நாங்கள், கோகோ பீட்டை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல், அதில் ஊட்டச்சத்துக்களைக் கலந்து அதன் தயாரிப்புகளையும் ஏற்றுமதி செய்கிறோம்.
அது எப்படி என்றால், முதலில் தென்னை மட்டையைச் சேகரித்து, அதில் உள்ள இலைகள், நார்கள், பிற கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யப்படுகிறது. பின்பு, அதில் இருக்கும் மண்ணை தண்ணீரால் சுத்தப்படுத்தி பிளாக்குகள், டிஸ்க்குகளாக மாற்றப்படுகிறது.
மேலும், வீட்டுக் கதவு, பிரஷ்கள், கயிறு, துகள் பலகை மற்றும் ஸ்டாண்டர்டு பேக்கிங் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |