அம்பானி வீட்டு விழாவில் சமையலில் கலக்கிய தமிழர்! பில்கேட்ஸ் கேட்ட வடை பற்றிய சுவாரஸ்யம்
முகேஷ் அம்பானி வீட்டின் திருமண முந்தைய கொண்டாட்டத்தில் சமைத்த சென்னை தமிழர் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி பார்க்கலாம்.
ஆனந்த் அம்பானி திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் தொடங்கியதிருமணத்தின் முந்தய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், தென்னிந்திய உணவுகளை சமைப்பதற்காக சென்னையை சேர்ந்த அறுசுவை ஸ்ரீதர் என்பவர் தான் சென்றிருந்தார்.
அவர் பகிர்ந்த விடயம்
அறுசுவை ஸ்ரீதர் தனியார் சேனல் ஒன்றில் பேசுகையில், "நான் அம்பானி வீட்டிற்கு கடந்த 8 ஆண்டுகளாக தென்னிந்திய உணவுகள் சமைத்துக் கொண்டிருக்கிறேன்.
அவர், மகன் மற்றும் மகள் திருமணத்தில் சமைத்துள்ளேன். அவரது சகோதரி மகளின் திருமணத்தில் தான் முதன்முதலாக அறிமுகமானேன். அப்போது ஐடிசி ஹொட்டலில் தனியாக கிச்சன் கொடுத்து அனுமதி அளித்தார்கள்.
அந்த இடத்தில் முதல் முதலில் தலை வாழை இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அங்கு, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சச்சின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிலிருந்து எங்களது உணவுகள் பிடித்து போக தென்னிந்திய உணவுகள் சமைக்க வேண்டும் என்றால் அழைப்பார்கள். ஆனந்த் அம்பானியின் Pre -Wedding -க்கு சமைப்பதற்காக இரண்டு மாதங்கள் முன்பே அழைப்பு விடுத்தார்கள்.
பின்னர், பிப்ரவரி 8 முதல் 20 நாட்கள் வரை ரச வடை, அடை, அவியல் போன்ற வித விதமான தென்னிந்திய உணவுகள் கொடுத்தோம்.
முகேஷ் அம்பானி தென்னிந்திய உணவு சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்தால், விதவிதமான உணவுகள் அன்று இருக்கும். அதுவும், 2500 உணவு வகைகளில் 30 வகையான இட்லிகள், 20 வகைக்கும் மேலாக தோசை, வடை ஆகியவை வழங்கினோம்.
இண்டிகோவில் டிக்கெட் வாங்கி கொடுத்து நன்றாக கவனித்தார்கள். பில்கேட்ஸ் குடும்பத்தினருடன் வந்த போது வடையை பார்த்து என்னவென்று கேட்டார். அப்போது அதை 'spicy donut' என்று சொன்னார்கள். அவர் அதை சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஒன்று கேட்டார். இது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.
ஷாருக்கான் வீட்டில் சமைக்கும் போது அப்பவே தென்னிந்திய உணவு தோசையை சூப்பர் என்று நீடா அம்பானி கூறியிருக்கிறார். அடுத்த நாள் என்னை பார்க்கும் போது, ஷாருக்கான் உங்களது தோசையை சாப்பிட்ட பின்பு நன்றாக இருந்தது என்று கூறினார் என சொன்னார்" என்று பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |