உலகத்தமிழர்களின் கவனத்திற்கு.. உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும்! கொந்தளித்த இயக்குனர் சேரன்
தமிழர்களை தவறாக சித்தரிக்கும்‘தி பேமிலி மேன் 2’ போன்ற இணையத்தொடர்களால் உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும் என இயக்குனர் சேரன் கொந்தளித்துள்ளார்.
சமீபத்தில் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரின் டிரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அத்தொடருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனினும், திட்டமிட்டபடி ஜூன் 4ம் திகதி ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் அமேசான் ஃபிரைமில் வெளியானது.
இந்நிலையில், தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சீமான் கடிதத்தை மேற்கோளிட்டு இயக்குனர் சேரன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, உலகத்தமிழர்களின் கவனத்திற்கு.. தமிழர்கள் மீது சூழ்ச்சிவாதிகள் சுமத்த முனையும் இதுபோன்ற செயல்களை முன்னரே களையாவிட்டால் உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும் என கூறியுள்ளார்.
உலகத்தமிழர்களின் கவனத்திற்கு.. தமிழர்கள் மீது சூழ்ச்சிவாதிகள் சுமத்த முனையும் இதுபோன்ற செயல்களை முன்னரே களையாவிட்டால் உலக நாடுகள் முன் நம் சந்ததிகள் அவமானம் கொள்ள நேரிடும். #Familyman2_against_tamil #UnsubscribeAmazon_Tamils https://t.co/4iBofsgDxw
— Cheran (@directorcheran) June 6, 2021