படப்பிடிப்பின் போது சறுக்கி விழுந்த நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு என்ன ஆனது.. எப்படி இருக்கிறார்? வெளியான முக்கிய தகவல்
திண்டுக்கலில் நடந்த படப்பிடிப்பின் போது சறுக்கி விழுந்த நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படமான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பில் சேரன் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார். திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது சேரன் தவறி விழுந்து தலையில் காயமடைந்துள்ளார்.
நீல சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்திருக்கும் சேரன் சறுக்கி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார், அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாம்.
எனினும், சேரன் தனது மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார். விபத்தை தொடர்ந்து படத்தின் குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம்.. நலமாக இருக்கிறேன்.. பயம் ஒன்றும் இல்லை.. உங்களின் அன்பால், கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி.. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும்.. நன்றி அனைவர்க்கும்..
— Cheran (@directorcheran) August 5, 2021