கொரோனாவால் கணவன் மனைவிக்குள் நடந்த சோகம்: 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரித்தானியாவின் Chessington என்ற பகுதியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கீத் பெட்டிஷன் (73) என்ற முன்னாள் பேருந்து ஓட்டுநருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கீத் பெட்டிஷன் (73) என்ற நபர் தன் மனைவி இலடிக்கோ பெட்டிஷன் (48) என்ற நபரை 2020 ஆண்டு நடந்த ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிபதி சைமன் மாயோவிற்கு கீழ் வந்த நிலையில் பெட்டிஷன் (73) கொலை செய்ததை உறுதி செய்து அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளார்.
தான் தற்காப்பிற்காகவே மனைவியை கொலை செய்ததாக கூறிய பெட்டிஷன் வாதத்தை ஏற்கமறுத்த நீதிபதி அவருக்கு இந்த தண்டனையை உறுதி செய்துள்ளார்.
இலடிக்கோ பெட்டிஷன் (48) கொலை செய்யப்பட்ட அன்று இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இந்த வாக்குவாதத்தின் இறுதியில் கோவமடைந்த கீத் பெட்டிஷன் (73) தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ஜூரோர்ஸ் என்பவர் பேசுகையில், இருவரும் நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்தனர், 2020 ஆண்டு கீத் பெட்டிஷன் (73) அவர் ஓட்டுநராக இருந்த பேருந்து விபத்துக்குள்ளானதால் அவரது வேலை பறிக்கப்பட்டது. அதன் பின் வந்த பெருந்தொற்று காரணமாக பெரும் பொழுது வீட்டில் கழிக்க நேரிடத்தில் இருவரும் அதிகமாக குடிக்கவும், சண்டையிடவும் ஆரம்பித்துள்ளனர்.
இலடிக்கோ பெட்டிஷன் (48) 2019 ஆண்டே தனது கணவர் மீது பொலிஸாரிடம் புகார் அளித்த நிலையில் அவரது மகள் அறிவுறுத்தலின் பேரில் அந்த புகாரை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.