நெஞ்சில் தீராத சளியா? அதனை போக்க இதோ அற்புதமான மருந்து
மழைக்காலம் வந்து விட்டாலே போதும் பல நோய்கள் நம்மை வந்து ஒட்டி கொள்கின்றது.
குறிப்பாக சளி, இருமல் போன்றவை தொல்லை தருபவையாக இருக்கின்றது.
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.
தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பால் -1 கப்
- மிளகு - 10
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- பனங்கற்கண்டு - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் மிளகை பொடித்துக் கொள்ளவும். பிறகு பாலை காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் தூள், சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து பருகவும்.
இந்த பாலை சூடாக குடித்தால் நன்றாக இருக்கம்.
இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.