கோலியை கங்குலிக்கு பிடிக்கவில்லை…கசிந்த இந்திய அணியின் ரகசியங்கள்! சர்சையில் தேர்வு குழு தலைவர்
கேப்டன்சி பதவி பறி போனதிற்கு அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி முக்கிய காரணம் என்று விராட் கோலி நம்பினார் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ரகசியங்கள் கசிவு
தனியார் டி.வி சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு கமிட்டி தலைவர் சேத்தன் சர்மா இந்திய அணியின் பல ரகசியங்களை கசியவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கோலி ஆகியோருடன் ஆலோசித்த அணியின் உள் விவகாரங்களை சேத்தன் சர்மா கசிய விட்டுள்ளார்.
அத்துடன் இந்திய அணியில் நிறைய வீரர்கள் முழு உடல் தகுதி இல்லாவிட்டாலும் ஆட்டத்திற்கு விரைவாக திரும்புவதற்காக ஊக்க மருந்து ஊசிகளை போட்டு கொள்வதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கோலி கேப்டன் பதவி
கோலியின் கேப்டன்சி பதவி பறிப்பு குறித்து பேசி இருந்த சேத்தன் சர்மா, இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கோலி இருவருக்கும் இடையே பெரிய போர் எல்லாம் இல்லை, ஆனால் இருவருக்கும் இடையே ஈகோ இருந்தது.
இதற்கிடையில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதற்கு அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி முக்கிய காரணம் என்று விராட் கோலி நினைத்தார்.
விராட் கோலியை ஒருபோதும் கங்குலி விரும்பவில்லை, இருப்பினும் வீடியோ கால் மூலம் நடைபெற்ற தேர்வு குழு கூட்டத்தில் கேப்டன்சி விலகல் முடிவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி கங்குலி கூறினார், ஒருவேளை அதை விராட் கோலி கவனிக்காமல் விட்டு இருந்து இருக்கலாம்.
அதே சமயம் ரோஹித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக இருக்கவில்லை, மாறாக ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் கங்குலிக்கு விருப்பம் இருந்தது இல்லை என இந்திய அணியின் ரகசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டுள்ளார்.